×

இந்தியன் 2 படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்...!

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார் கமல் ஹாசன். இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு 'இந்தியன் 2' படத்திலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிஸியான ஒளிப்பதிவாளரான அவர் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தாமதமாவதால் அவரால் வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு மற்றொரு பெரிய படத்திலிருந்து வாய்ப்பு வந்திருப்பதால், இந்தியன் 2 படத்தில் இருந்து விலக திட்டமிட்டிருக்கிறாராம்.

Tags : celebrity ,Indian ,
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...